இலங்கை இரயில்வே ஒரு வருடத்தின் பின்னர் தலைமன்னாருக்கான சேவைகளை நவம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
முதல் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னாருக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்துள்ளார்.
ரயில் நேர அட்டவணையின்படி, ரயில் அனுராதபுரத்தை இரவு 7.35 மணிக்கு அடைந்து இரவு 9.50 மணியளவில் தலைமன்னார் சென்றடையும். இந்த ரயில் மறுநாள் (நவம்பர் 13) அதிகாலை கொழும்பு திரும்பும். இந்த ரயில் தலைமன்னாரிலிருந்து காலை 4.15 மணிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கி காலை 7.15 மணிக்கு அனுராதபுரத்தை அடைந்து 10.15 கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும்.
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு காரணமாக தலைமன்னார் பாதை சுமார் ஒரு வருடமாக மூடப்பட்டிருந்தது.
தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு நன்மை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்