நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Michael Bracewell மற்றும் Zakary Foulkes ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்