Wednesday, January 15, 2025

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கியமான தகவல்கள்

– வாக்காளர் எண்ணிக்கை : 17,140,354

– அபேட்சகர்களின் எண்ணிக்கை : 8,361

– வாக்குச் சாவடிகள் : 13,421

நாளை (14.11.2024) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய தகவல்களை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இத்தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2024 வாக்காளர் பட்டியலுக்கமைய அது அமைகின்றது.

அத்துடன் இத்தேர்தலில் 8,361 அபேட்சகரர்கள் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு…

வாக்காளர் பதிவு தகவல்

  • வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354
    (2024 வாக்காளர் பட்டியலின்படி)
  • குடும்பங்களின் எண்ணிக்கை – 6,476,670
  • தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை – 13,314
  • தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை – 22
  • நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை – 25

அரசியல் கட்சிகள்

  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை – 83
  • போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை – 49

வேட்புமனு

  • தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் – 408
    – அபேட்சகர்களின் எண்ணிக்கை – 5,015
  • தாக்கல் செய்த சுயேச்சை குழுக்கள் – 282
    – அபேட்சகர்களின் எண்ணிக்கை – 3,346
  • மொத்த கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் – 690
    – மொத்த அபேட்சகர்களின் எண்ணிக்கை – 8,361

தேசியப் பட்டியல் பரிந்துரைகள்
(அரசியலமைப்புச் சட்டத்தின் 99அ பிரிவின்படி)

  • வழங்கியுள்ள அரசியல் கட்சிகள் 27 (எண்ணிக்கை 516)
  • வழங்கியுள்ள சுயேச்சை குழுக்கள் 02 (எண்ணிக்கை 11)
  • மொத்தம் – 527

தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை – 225
அரசியலமைப்பின் 96(4) மற்றும் 98ஆவது பிரிவுகளின்படி – 196
அரசியலமைப்பின் 99(அ) பிரிவின்படி – 29

வாக்குச் சாவடிகளின் விபரம்

  • ஒரு வரிசை – 6,147
  • இரண்டு வரிசைகள் – 7,274
  • மொத்தம் – 13.421
  • பெண் வாக்காளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை – 107
  • வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை – 152,000 (அண்ணளவாக)
  • வாக்குச் சாவடிகளில் பொலிஸார் எண்ணிக்கை – 27,000 (அண்ணளவாக)

வாக்கு எண்ணும் பணி

  • வாக்கு எண்ணும் வளாகங்களின் எண்ணிக்கை – 54
  • எண்ணும் மண்டபங்களின் மொத்த எண்ணிக்கை – 1,582
  • தபால் வாக்கு எண்ணும் மண்டபங்களின் எண்ணிக்கை – 452
  • வாக்கு எண்ணும் மண்டபங்களின் மொத்த எண்ணிக்கை – 2,034
  • முடிவு அறிவிப்பு மையங்களின் எண்ணிக்கை – 22
  • வாக்கு எண்ணும் மண்டபங்களில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை – 80,000 (அண்ணளவாக)

தபால் வாக்கு

  • தபால் வாக்காளர்களின் எண்ணிக்கை – 737,902
  • கிடைக்கப் பெற்ற தபால் வாக்கு விண்ணப்பங்கள் – 759,083
  • அங்கீகரிக்கப்பட்ட தபால் வாக்கு விண்ணப்பங்கள் – 737,902

வாக்குப் பெட்டிகள்

  • 16 1/2 x 13 x 22 – சிறிய வாக்குப் பெட்டிகள் : 7,850
  • 21 x 14 1/2 x 23 – நடுத்தர வாக்குப் பெட்டிகள் : 3,775
  • 24 x 17 x 26 – பெரிய வாக்குப் பெட்டிகள் : 2525

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles