16|11|2024 Saturday 10:00 AM
மன்னார் மாவட்டத்தில விவசாயிகள்இ மீனவர்கள்இ எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் நிரந்தர தீர்வு தரும் என்ற நம்பிக்கையுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மொஹமட் சாஜித் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (16.11.2024) காலை 10 மணியளவில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற அமைதியான வெற்றிக் கொண்டாட்டத்திற்கான பொங்கல் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்
‘இலங்கை வரலாற்றில். விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் எமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.’
‘தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்ற இன மத பேதம் இல்லாமல். அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்துள்ளார்கள்.’
‘இந்த வெற்றிக்காக உழைத்து எங்களோடு சேர்ந்து பயணித்தவர்களுக்கும்இ வாக்குகளை வழங்கிய இப்பிரதேச மக்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாகவே மிகவும் அமைதியான முறையில் இங்கு பொங்கல் செய்து கொண்டாடுகிறோமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில்இ தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்இ அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)