மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணம்

@radiomannar

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணம் மன்னார் பொது வைத்தியசாலையில் MANNAR mannarnews mannarsrilanka mannartownclub mannartown tamilnews colombo jaffna tamilsongstrincoponnu

♬ original sound – radiomannar – radiomannar

⬆ இந்த link இனை ⬆கிளிக்செய்து முழுவிபரம் [ வீடியோ ] காணலாம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே (19.11.2024) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாகக் கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த போது, தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்குச் சொல்லாமல் மறைத்துள்ளதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். அத்துடன், உயிரிழந்த பெண்ணின் உடலைப்பார்ப்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்ச்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்ப்பதாகவும், தொலைப்பேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றைக் கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!