Wednesday, January 15, 2025

மன்னார் வைத்திய சாலையில் குழந்தை பிரசவித்த நிலையில் தாய் சேய் மரணம்.

மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19.11) செவ்வாய்க்கிழமை மரணமடந்துள்ளார். அவரது குழந்தையும் மரணித்துள்ளதாகத் தெரியவருகிறது.

(18.11), திங்கட்கிழமை காலை வைத்திய சாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த குறித்த இளம்பெண் அதீத வலியினால் துடித்து தனக்கு இயலாமல் உள்ளது சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்கச் செய்யுமாறு தாதியர்களிடம் கெஞ்சியும் அவர்கள் அதைக் கவனத்திற் கொள்ளாது போனதனால், குழந்தையையைப் பிரசவிக்க முடியாது (19.11) மாலை 5 மணியளவில் இறந்து போனதாக உறவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவருடைய தாயார் தெரிவிக்கையில்,

“நான் இந்தியாவில் வசித்து வருகின்றேன், எனது மகள் திருமணம் முடித்து இங்கே வசிக்கிறார், நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாது இருந்த அவருக்கு இது
முதற்குழந்தை என்பதனால் அவரைப் பராமரிப்பதற்காக,நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், நாங்கள் கடந்த, (18.11),திங்கட்கிழமை காலை எங்களது மகளைப் பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதித்திருந்தோம். அவர் வலியினால் துடித்திருக்கின்றார், தன்னால் முடியவில்லையெனத் தாதியர்களிடம் கெஞ்சியுள்ளார்,

நான் அவரைப் பார்க்க சென்ற போது, என்னை வெளியே இருக்குமாறு கூறினார்கள். நான் அங்கேயே இருந்தேன். மாலை நான்கு மணியளவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், பரபரப்பாக இருந்தனர். எனது மக்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறினர்.

“நான் மகளையாவது பார்க்க அனுமதி கேட்ட போது என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள், அங்கு எனது மகளைச் சுற்றி வைத்தியர்கள் மற்றும், தாதியர்கள் நின்றார்கள். அவர்கள் என் மகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார்கள். ஆனால் நான் பிரசவ அறைக்குள் சென்றபோதே என் மகள் எந்த அசைவுகளுமின்றியே இருந்தார். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத் தெரிவித்தார்.”

இந்த நிலையில், மக்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈட்டுபட்டனர். ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் இவ்வாறான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இது வைத்தியசாலையின் கவனமின்மையெனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் மக்களுக்குப் பதிலளித்த வைத்திய அத்தியட்சகர், அசாத் ஹனீபா,

“இங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன, மரணம் நிகழ்கின்ற போது எமது விசேட மகப்பேற்று நிபுணர், வைதியர்கள், மற்றும் தாதியர்கள், கடமையிலிருந்துள்ளனர். எனவே முறையான விசாரணைகளை,மேற்கொண்டு பக்கச் சார்பற்ற நீதி வழங்குவோம்”என்று தெரிவித்தார். எவ்வாறாயினும் இரவு 12 மணிவரை மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு வெளியேயும் பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், நிலமையைக் கட்டுப்படுத்த அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles