மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகற்பேறுக்காக சேர்க்கப்ட்டு மரணித்த இளம் தாயினதும் சிசுவினதும் மரணம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகைள் சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு மூன்று தினங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெற்ற பின்பு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பட்டித்தோட்டத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் வனஜா என அழைக்கப்படும் 28 வயதுடைய ஜெகன் ராஜஸ்ரீ திங்கட்கிழமை (18) அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையில் மகற்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய் கிழமை (19) மாலை பிரசவம் நடைபெற்றபோது சிசுவும் தாயும் இறந்துள்ளனர்.
சடலங்கள் இரண்டும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதன் கிழமை (20) மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை மக்கள் ஒன்று திரண்டு ஒரிரு கோரிக்கைகளை முன்வைத்து இறப்புக்கு நீதிகோரி கடும் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு கருதி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வலவழைக்கப்
பட்டிருந்தனர்.
சடலங்கள் இரண்டும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதன் கிழமை (20) மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை மக்கள் ஒன்று திரண்டு ஒரிரு கோரிக்கைகளை முன்வைத்து இறப்புக்கு நீதிகோரி கடும் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
அதேவேளை, மன்னார் மாவட்ட செயலகத்தில், இந்த மரணச் சம்பவம் தொடர்பாக, அரச அதிபர் தலைமையில், வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது,
அதன்பின்னர் குறித்த குழுவினர் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து, இறந்த பெண்ணின் உறவினர், சிவில் சமூக அமைப்பினர், மதகுருமார்கள் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினருடன், கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர்.
தாயினதும் சிசிவினதும் மரணம் தொடர்பாக பூரண விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளரினால் அமைக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட குழுவினரும் மூன்று தினங்களுக்குள் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மூன்று குழுக்களினாலும் சமர்பிக்கப்படும் அறிக்கைகள் சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதி பெற்ற பின்பு குற்றவாளிகளாக இனம் காணப்படுவோருக்கு, எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதனை எழுத்து மூலமாகவும் கையளித்த நிலையில் மக்கள் அவ்விடத்தை விட்டுக் கலைந்து சென்றனர்