யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மாவீரர் வாரம்ஆரம்பமாகி 21ஆம் திகதி மாலை அப்பகுதிகளில் அமைந்துள்ள சமாதிகளில்மலர்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி தீபமேற்றப்பட்டது.
பிரதான மாவீரர் வைபவம் யாழ்ப்பாணம் தீவக மயானத்தில் இடம்பெற்றதுடன், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாகாணங்களில் உள்ள பலஇடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்கள் , போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இம்மாதம் 27ஆம் திகதி வரை தினமும் இந்த நிகழ்வுகள்இடம்பெறுகின்றன.
நவம்பர் 27ஆம் திகதி மாலை 6-05 மணிக்கு இந்த மாவீரர் நாள் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் இந்த மாவீரர்வாரத்தின் இறுதி நாளாகவும் அமையவுள்ளது.
அன்றைய தினம், இறந்தவர்களின் உறவினர்கள் ஒவ்வொரு கல்லறையின் முன்பும்வந்து மலர்மாலைகள் மற்றும் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றிஅஞ்சலி செலுத்துவதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தென்னை மரத்தைவிநியோகிப்பார்கள்.
இவ்வருடம் வடக்கில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு பாதுகாப்புதரப்பினர் இடையூறு எதையும் செய்யவில்லை என்பது விசேட அம்சமாகும்.