மன்னார் கறிற்ராஸ் , வாழ்வோதயம் இவற்றினால் முன்னெடுக்கப்பட்ட ‘நாமும் சாதனையாளர்கள்’ என்ற தொணிப்பொருளில் விசேட தேவையுடையோர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.
வெள்ளிக் கிழமை (22) காலை 9.30 மணி தொடக்கம் மாலை வரை மன்னார் நகர சபை மண்டப பகுதியில் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி ஜூ.ஏ.அருள்ராஜ் குரூஸ் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இதில் பிரதம மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை . மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மற்றும் மன்னார் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கிறிஸ்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு விசேட தேவையுடையோர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தலையும் சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தனர்.
அத்துடன் இந்நிகழ்வில் வங்கியாளர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் விசேட தேவையுள்ள சிறுமிகளின் நடனங்கள் . வன்னி கறிற்ராஸ் — கியூடெக் விசேட தேவை கல்வி ஆசிரியர்களின் நடனம் ஆகியவை விசேட நிகழ்வுகளாக இடம்பெற்றதுடன் மன்னார் வாழ்வோதயத்தில் நீண்டகால பணியாளராக கடமைபுரிந்துள்ள திருவாளர் யோகம் அவர்களையும் கௌரவித்த நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற சந்தைப்படுத்தலில் ‘மார்டப்’ பிள்ளைகள் மாற்றாற்றோர் மற்றும் சிறுகைத்தொழில் செய்யும் பெண்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் கண்காட்சி பொருட்களாக வைக்கப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது