தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் டாப் இடத்தில் இருக்கும் பிரபலங்கள் விவாகரத்து செய்தியை வெளியிட்டு உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள்.
தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏ ஆர் ரகுமான் – சாய்ரா பானு போன்றவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதில் ஜிவி பிரகாஷ் – சைந்தவி எந்த சர்ச்சைகளும் இல்லாமல் விவாகரத்து சிக்காமல் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஒரு பக்கம் விவாகரத்து செய்ய முடிவெடுத்தாலும் தொழில் ரீதியாக இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
அந்தவகையில் டிசம்பர் 7 ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செலிபிரேஷன் ஆஃப் லைஃப் என்ற பெயரில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தலைமையில் ஒரு இசைக்கச்சேரி நடக்கவுள்ளது.
இந்நிகழ்வில் பாடகி சைந்தவியும் பாடப்போகிறாராம். இதை சைந்தவியே ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். விவாகரத்து பெற்றாலும் இருவரும் அதையெல்லாம் தலையில் போட்டுக்கொள்ளாமல் இசைக்காக மீண்டும் இணையவுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.