Tuesday, January 21, 2025

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர மன்னார் விஜயம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் பதிப்புக்குள்ளான நிலையில்,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11)காலை பிரதிப்  பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய தங்குமிடம், உணவு, மருத்துவ சேவை போன்ற அவசர நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது.மேலும் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்தம் குறித்தும்  பாதுகாப்பு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஆராயப் பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது, ஏற்பட்டிருக்கும் இந்த அனர்த்தத்திலிருந்து, மக்களை மாத்திரமல்லாது, அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டுமென முப்படையினர், பொலிசார் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களிடம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின், ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த விஷேட கலந்துரையாடலில்,
வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகம்,ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ,கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த  49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் சுமார் 2100 நபர்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலையால் மன்னார் மாவட்டத்தில் இடம் பெயரும் மக்களின் தொகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்ந்தும் பெய்யும் மழை காரணமாக,அனுராதபுரம் மற்றும் மல்வத்து ஓயாவில் இருந்து அருவியாறு வழியாக கூடுதலான நீர் வந்து கொண்டு இருக்கின்றமையினால்,மக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த முன்னாயத்த நடவடிக்கைகளை துரித்தப்படுத்துமாறும், அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles