நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்திற்காக விண்ணப்பிப்பதற்கு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மாத்திரமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இதற்கான இறுதி திகதி தற்போது எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.