விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி வரை அந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 01|12|2024 உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.