மன்னார்| மறை மாவட்டத்திற்கு |புதிய ஆயர் நியமனம்| Mannar | Ernennung | eines neuen | Bischofs für den Bezirk | මන්නාරම| දිස්ත්‍රික්කයට |නව රදගුරු තුමා පත් | කෙරේ

மன்னார் மறைமாவட்ட புதிய ஆயருக்கு நல்வாழ்த்துகள்

மன்னார் மறைமாவட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களினால் புதிய ஆயராக நியமனம் வழங்கப்பெற்ற எமது மண்ணின் மைந்தன் அருட்பணி.ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கு மகிழ்வுடன் மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பு சுவிஸ் ஆகிய நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அருட்பணி.ஞானப்பிரகாசம் அவர்களின் இறைவிசுவாசமும் ஆன்மிகப்பணியும் எளிமையான வாழ்வுமுறையும் அடக்கமான அமைதியான ஆளுமைமிக்க தலைமைத்துவப் பண்பும் ஆயராக ஆயத்துவபணிக்கு உயர்த்தியுள்ளது.
தனது சகோதரத்துவ அருட்பணியாளர்களை அரவணைத்து பொதுநிலையினர் மக்களை ஆழமாக பற்றிப்பிடித்து இறைபற்றுதலுடன் வழிநடத்தக்கூடிய நல் ஆயராகவும்,
அனைத்து மத மக்களிடையே நல்லுறவைப்பேணி தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வுரிமைகளை கட்டிக்காக்கும் ஆயர்தந்தையாக செயற்படவேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.
அத்துடன் கடந்தகாலத்தில் தாயக மக்களின் நலனுக்காக நாங்கள் முன்னெடுத்த உடனடி மனிதாபிமானப்பணிக்காக தங்களின் ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் நிறைவாக இருந்ததை நன்றியுடன் நினைவில் கொள்கின்றோம்.
உங்கள் பணிசிறக்க எமது செபவேண்டுதலுடன் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கின்றோம்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பு சுவிஸ்
15.12.2024.

@radiomannar

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!