மன்னார் டொன் பொஸ்கோ ஆங்கில மொழி மூல பாடசாலையின் 2024 ஆம் ஆண்டிற்கான கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்வு 18.12.2024 அன்றைய தினம் அவர்களது கலையரங்கில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பம் ஆகியது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் அவர்களும், அவர்களுடன் பல பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள்.
இந்நிகழ்வின் குறிப்பிடப்படும் படியான விசேடம்என்னவெனில் இஸ்லாம் ,இந்து ,கிறிஸ்தவ சிறார்கள் இந்த நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர் . அத்துடன் இந்த மூன்று மதத்தை சேர்ந்த பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து மத வேறுபாடுகள் இன்றி இந்த கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வுகளை சிறப்பித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.