தமிழ் அரசியல் கைதிகளை| விடுதலை செய்ய வலியுறுத்தி| மன்னாரில் கையெழுத்து போராட்டம்|

வீடியோ இணைப்பு ⤵
https://www.facebook.com/share/v/15uvFGs1HU/?mibextid=wwXIfr

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி.
கையெழுத்துப் போராட்டம் ஒன்று மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று (30.12) திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புணர்வாழ்வளிக்கப்பட்டு, சமூக மயப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி இந்த கையெழுத்து போராட்டமானது இடம் பெற்றுள்ளது.

இதில் பொதுமக்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அருட்தந்தையர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!