மன்னார் மறை மாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் ( Thamil Nesan) மன்னார் ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக மடுத்திருப்பதியில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானத்தின் நிறைவு நாளான இன்று (14.03.) ஆயர் அவர்களினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டு மன்னார் முருங்கனைச் சேர்ந்த கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் 1997ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படத்தப்பட்டார்.
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளதுடன் பல சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.