மன்னார் கொன்னையன் குடியிருப்பு மக்கள் நீண்ட காலமாக பேருந்து சேவை இன்றி அல்லலுற்று வந்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏற்பாட்டில், புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (26.5) திங்கட்கிழமை, மதியம் 1.00 மணியளவில், மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தலைமையில் குறித்த பேருந்து சேவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மிக நீண்ட வருடங்களாக இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்து சேவையின்றி அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்து வந்த கொன்னையன் குடியிருப்பு மக்கள் 12 வருடங்களுக்குப் பிறகு குறித்த பேருந்து சேவையினை ஏற்படுத்திக் கொடுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்.