31.05.2025
கோடி அற்புதரான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா எதிர்வரும் 03.06.2025 செவ்வாய்கிழமை நடைபெறுகின்றது.
யாத்திரிகர்களின் வணக்கத் தளமாக இருக்கும் இவ் ஆலயத்தின் பரிபாலகர் அருட்பணி லோறன்ஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழா முன்னிட்டு 31.05.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றமும் திருப்பலியும்
01.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பலியும்
02.06.2025 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனையும்
03.06.2025 செவ்வாய்கிழமை காலை 7.30 மணிக்கு திருப்பலியும் இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியும்
இதைத் தொடர்ந்து மதியம் 3 மணிக்கும் மாலை 5 மணிக்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்
ஒவ்வொரு திருப்பலி நிறைவிலும் திருச்சுரூப அசீர் இடம்பெறும் என இவ் ஆலயத்தின் பரிபாலகர் அருட்பணி லோறன்ஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.