இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை(29.06) ஞாயிற்றுக்கிழமை,தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் குறித்த 8 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இந்திய மீனவர்களைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் கையளித்து ள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.